×

மாநில செஸ் போட்டி ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் முதலிடம்

செங்கோட்டை, மார்ச் 21: மாநில அளவிலான செஸ் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் முதலிடம் வென்று சாதனை படைத்தார். ஆனந்தி செஸ் அகாடமி என்ற அமைப்பின் சார்பில் ‘ஏதன் ஆப் தி ஈஸ்ட் 2025’ என்ற பெயரில் மாநில அளவிலான செஸ் போட்டி மதுரையில் நடந்தது. இதில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் செங்கோட்டை அடுத்த ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவர் ஜெகத் பிரபு முதலிடம் வென்று சான்று மற்றும் சுழற்கோப்பையை பரிசாக பெற்றார். சாதனை படைத்த மாணவரை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.

The post மாநில செஸ் போட்டி ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Treasure Island School ,Sengottai ,Treasure Island International School ,Anandi Chess Academy ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை-ஈரோடு ரயிலை கவிழ்க்க சதி?