×

களக்காடு அருகே சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு பேரணி

களக்காடு, மார்ச் 21: உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி கோவிலம்மாள்புரத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் யூனியன் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். களக்காடு அருகே கோவிலம்மாள்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர், திருக்குறுங்குடி னிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர் சார்பில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் சிதம்பரநாதன் துவக்கிவைத்தார். இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ- மாணவிகள், சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என கோஷமிட்டனர். முன்னதாக னிவாசன் சேவைகள் அறக்கட்டளை கல்விப்பணியாளர் பிரிசில்லா சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பேசினார். இதையொட்டி மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டதோடு இதில் வெற்றிபெற்ற அனைவருக்கும் சான்று, பரிசு வழங்கப்பட்டது.

The post களக்காடு அருகே சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Squid Day ,Kalakkad ,Kalakadu ,Union School ,Templemalpuram ,World Squirrel Day ,Oradachi Union Primary School ,Thirukurungudi Nivasan Services Foundation ,Kovilammalpuram ,Squirrel Day Awareness Rally ,Dinakaran ,
× RELATED திருக்குறுங்குடி நம்பி கோயில்...