×

பீகாரில் ஒன்றிய அமைச்சரின் உறவினர்கள் குழாயடி சண்டை: துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி

பாகல்பூர்: பீகாரில் ஒன்றிய அமைச்சரின் உறவினர்கள் இடையே ஏற்பட்ட குழாயடி சண்டையில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரையொட்டி உள்ள நவுகச்சியா காவல் மாவட்டம் ஜகத்பூரை சேர்ந்தவர்கள் விஸ்வஜித் மற்றும் ஜெய்ஜித் யாதவ். இரட்டையர்களான இவர்கள் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராயின் நெருங்கிய உறவினர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரட்டையர்கள் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களின் தாயார் இருவரையும் தடுக்க முயன்றார். ஆனால் வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த விஸ்வஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெய்ஜித் யாதவும், அவர்களின் தாயாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

The post பீகாரில் ஒன்றிய அமைச்சரின் உறவினர்கள் குழாயடி சண்டை: துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Union ,Bhagalpur ,Union Minister ,Bihar ,Vishwajit ,Jayjit Yadav ,Jagatpur ,Naugachhiya ,Union Minister of State for Home Affairs… ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...