×

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கரும்பு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள்

தண்டராம்பட்டு, மார்ச் 21: தண்டராம்பட்டு அடுத்த கொழுந்தம் பட்டு ஊராட்சியில் பன்னாரி அம்மன் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து தண்டராம்பட்டு ராதாபுரம் வழியாக லாரி, டிராக்டர் மூலம் விவசாயிகள் கரும்பு ஏற்றி அனுப்புகின்றனர். இந்த வாகனம் தரடாப்பட்டு வழியாக செல்லும்போது கரும்பு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் முந்தி செல்வதனால் அவ்வழியாக வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் கார் பள்ளி பேருந்து எதிரே வருவதனால் ஒரு வித அச்சத்துடனே செல்கின்றனர். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கரும்பு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கரும்பு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Dandarampattu ,Pannari Amman Private Sugar Plant ,Kolantham Patti ,Vilupuram ,Kallakurichi ,Dandarampattu Radhapura ,Dinakaran ,
× RELATED நண்பனுடன் சேர்ந்து காதலியை காதலன் கூட்டு பலாத்காரம்