×

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

அந்தியூர்,மார்ச்21: அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுகளுடன் துவங்கியது. தொடர்ந்து, வரும் 26ம் தேதி மகிஷாரசூரமர்த்தனம் என்னும் எருமை கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றமும், 7ம் தேதி சட்டத்தேர், 8ம் தேதி புஷ்ப பல்லக்கு காட்சி மற்றும் ஆராதனை நடக்கிறது. ஏப்ரல் 9ம் தேதி காலை முக்கிய நிகழ்வான, குண்டம் திருவிழா,11ம் தேதி முதல் 14 வரை தேரோட்டமும், 15ல் பாரி வேட்டையும், 16ல் வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

The post அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Anthiyur Bhadrakaliamman Temple Kundam Festival ,Anthiyur ,Bhadrakaliamman ,Temple ,Panguni Kundam and ,festival ,Mahisharasuramarthanam ,
× RELATED அந்தியூரில் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா?.. அமைச்சர் விளக்கம்