×

தாம்பரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கலந்தாய்வு கூட்டம்

தாம்பரம்: தாம்பரம் மாநாராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாடு நகர்புற உள்ளமைப்பு சேவைகள் கழகம் காலநிலை மாற்றத்திற்கேற்ப நீண்ட கால விரிவான மற்றும் நிலையான தட்பவெட்பத்தை தாங்கக்கூடிய வகையில் மாநகர சுற்றுப்புற சூழல் குறிக்கோள் மற்றும் எதிர்பார்ப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், பொதுமக்களுக்கும் மற்றும் இதர அமைப்பினர்களுக்கும் பொருந்துமாறு தொலைநோக்கு திட்ட அறிக்கை தயார் செய்திட என்.கே.பில்ட்கான் பிரைவேட் லிமிடெட் நிறுவன ஆலோசகர் ஹிமான்சு தில்வாங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கும், பிற அமைப்பினர்களுக்கும் திடக்கழிவு மேலாண்மை பற்றி எதிர்காலத்திற்கேற்ப எப்படி தயார் செய்துகொள்ள வேண்டும் என்றும், திடக்கழிவுகளால் இயற்கைக்கு மாறாக நிகழ்வுகள் பற்றி அறியும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் மாநகராட்சி இணை ஆணையர் சசிகலா தலைமையில், அனைத்து மண்டல தூய்மை அலுவலர்கள், தூய்மை பணி ஆய்வாளர்கள், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர், செயலாளர், குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் என்.கே.பில்ட்கான் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், திடக்கழிவு மேலாண்மை நிபுணர் ரவிக்குமார், நிதி நிபுணர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tamil Nadu Urban Infrastructure Services Corporation ,Dinakaran ,
× RELATED மூவரசம்பட்டு ஏரி பகுதியில் குப்பை...