×

ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம்

ஆவடி: ஆவடியில் ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டில் தயாரிப்பது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. ஆவடியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட்(ஏ.வி.என்.எல்) சார்பில், போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்க குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நேற்று நடந்தது. ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (ஏ.வி.என்.எல்) இயக்குநர்கள் ராமச்சந்திரன், பிஸ்வரஞ்சன் பட்டநாயக் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கிவைத்தனர்.

பின்னர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போர் வாகன உதிரி பாகங்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இதில், போர் வாகனங்களின் தொழில்நுட்பங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் போர் வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே தயாரிக்கும் பொருட்டு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கவச வாகனங்களின் உற்பத்தியை மேம்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் அவர்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது என்பதை குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர்.

துடிப்பான மற்றும் வளர்ச்சி சார்ந்த இந்தியப் பொருளாதாரத்தில் எம்.எஸ்.எம்.இ குறிப்பிடத்தக்க பங்கை வலியுறுத்தியும், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்புப் பொருட்களின் முற்போக்கான உள்நாட்டு மயமாக்கலுக்கு எம்.எஸ்.எம்.இ மற்றும் டி.பி.எஸ்.யு இடையே அதிக தொடர்பு தேவை என்றும் வலியுறுத்தினர். மேலும் பாதுகாப்புத் துறையில் அதிகளவிலான உள்நாட்டுமயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் துறையில் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முன் முயற்சிகள் குறித்தும் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏ.வி.என்.எல்-ன் மூத்த நிர்வாகிகள், ராணுவ அதிகாரிகள், டி.பி.எஸ்.யு, தொழில், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி மற்றும் பிரதிநிதிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

The post ஆர்மர்ட் வெஹிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் சார்பில் போர் வாகன உற்பத்தி பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Armored Vehicles Nigam Limited ,Avadi ,AVNL ,Department of Defense ,Ministry of Defense ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் சேதமான பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்