- குன்னர் இராணுவ
- பயிற்சி மையம்
- குன்னர்
- ராணுவம்
- கருப்பு பாலம்
- பேரக்ஸ்
- வெலிங்டன்
- சின்னவாண்டிசாலே
- நீலகிரி மாவட்டம்
- Kunnur
- குன்னர் இராணுவ பயிற்சி
குன்னூர்: குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் புகுந்த காட்டு மாடுகள் வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ், பேரக்ஸ், வெலிங்டன், சின்னவண்டிசாேலை உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு மாடுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உலா வருவதால் அப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் ராணுவப் பயிற்சி மையத்தில் நேற்று புகுந்த காட்டு மாடுகள் அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்ததுடன், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு மாடுகள் அருகில் இருந்த வனத்துக்குள் தானாக சென்றது. ராணுவப் பயிற்சி மையமத்தில் ராணுவ வீரர்கள் அடிக்கடி நடைபயிற்சி மற்றும் ராணுவ அதிகாரிகள் வந்து செல்வதால், காட்டு மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்க காட்டு மாடுகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் புகுந்த காட்டு மாடுகள்: வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.
