×

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான திட்டம் இல்லை: ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்

டெல்லி: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்த திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என மக்களவையில் ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்துள்ளார். அதேபோல், ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கான கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை என அவர் கூறினார். மேலும், ஒன்றிய – மாநில அரசுகளின் ஊழியர்களின் ஓய்வூதிய வயது ஒரே மாதிரியாக இல்லாததற்கான காரணம் குறித்து கேட்டபோது, “அத்தகைய தரவை தேசிய அளவில் அரசு பராமரிக்கவில்லை” என அமைச்சர் பதில் அளித்தார்.

The post அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை மாற்றுவதற்கான திட்டம் இல்லை: ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் appeared first on Dinakaran.

Tags : Union Minister of State ,Jitendra Singh ,Delhi ,Union Minister of State Jitendra Singh ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED டெல்லி எய்ம்ஸில் ஜெகதீப் தன்கர் அனுமதி