தேனி, மார்ச் 20: தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. இது குறித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள தகவலில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கலாம் எனவும், இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன் மீது தனிக்கவனம் செலுத்தி உரிய நடவவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
The post தேனியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.
