×

அரசு பள்ளி ஆண்டு விழா

திருவாடானை, மார்ச் 20: திருவாடானை அருகே கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முனீஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவி அனுசுயா முன்னிலை வகித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர்(பொ) சேதுராமன் அனைவரையும் வரவேற்று பேசியதோடு பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். அதன்பிறகு இந்த அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பேச்சு, கவிதை, விளையாட்டு, நடனப் போட்டியுடன் கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டது.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றி மாணவர்களுக்கு பரிசுகளை பள்ளி தலைமையாசிரியர் சேதுராமன் வழங்கினார். இந்த நிகழ்வில் பெற்றோர்களுக்கும் போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Karuppur Panchayat Union Primary School ,School Management Committee ,Chairperson ,Muneeswari ,Vice Chairperson ,Anusuya ,School Annual Function ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்