×

சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம்

மதுரை, மார்ச் 20: மதுரை, அவனியாபுரத்தில் உள்ள நாடார் மஹாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி, சாலை பாதுகாப்பு மன்றம் மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவின் மதுரை கிளை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் எஸ்விஎன் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவி எம்.நிவேதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் எம்.கவிதா வாழ்த்துரை வழங்கினார்.

நெடுஞ்சாலைத்துறையின் மதுரை கோட்ட பொறியாளர் ஆர்.வரலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் ஏஎம்.காவியா மீனா, உதவி பொறியாளர் ஏ.ஐஸ்வர்யா ஆகியோர் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் மாணவி ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார்.

The post சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Road Safety Seminar ,Shermathai Vasan Women's College ,Madurai ,Nadar Mahajana Sangam Shermathai Vasan Women's College ,Road Safety Forum ,Road Safety Unit ,Avaniapuram, Madurai ,Dinakaran ,
× RELATED “அண்மையில் எத்தனை என்கவுன்ட்டர்கள்...