×

குலசேகரம் பேரூராட்சியில் நாககோடு – சங்கரன்விளை சாலை சீரமைப்பு

குலசேகரம்,மார்ச் 20: குலசேகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாககோடு பகுதியிலிருந்து சங்கரன்விளை பகுதிக்கு செல்லும் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் குலசேகரம் பேரூராட்சியில் நடைபெற்ற அம்ருத் குடிநீர் திட்டப் பணிகளுக்கு இந்த சாலை தோண்டப்பட்டதால் பல மாதங்களாக பயணிக்க முடியாத நிலையில் சாலை இருந்தது. இதனையடுத்து சாலையை சீரமைக்க குலசேகரம் பேரூராட்சி பொது நிதியில் ரூ.13.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர்கள் மேரி ஸ்டெல்லா, ஏஞ்சலின் ஜெனி, ரபிக்கா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post குலசேகரம் பேரூராட்சியில் நாககோடு – சங்கரன்விளை சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagakodu - Sankaranvilai ,Kulasekaram Town Panchayat ,Kulasekaram ,Nagakodu ,Sankaranvilai ,Amruth… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்