- அக்னி மாரியம்மன் கோவில் திருவிழா
- Senthamangalam
- Erumapatti
- அக்னி
- மாரியம்மன்
- கோவில்
- எருமபட்டி டவுன் பஞ்சாயத்து
- பங்கூனி
சேந்தமங்கலம், மார்ச் 20: எருமப்பட்டியில், அக்னி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி முகூர்த்தகால் நடப்பட்டது. எருமப்பட்டி பேரூராட்சியில், பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா, பங்குனி மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக, பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து சக்தி அழைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, அக்னி மாரியம்மன் கோயிலில் முன்பு முகூர்த்த கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வருகிற 23ம் தேதி, தேர்பூட்டு நிகழ்ச்சி, 24ம் தேதி மாவிளக்கு பூஜை, மாலை தீ மிதித்தல், 25ம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை, 26ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், ஆய்வாளர் முருகன் விழா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
The post அக்னி மாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.