×

சென்னை பெட்ரோலிய கழகம் 73 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் எண்ணெய் படலம் பரவியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு 73 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்தும்படி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெட்ரோலிய கழகம் தாக்கல் செய்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நியாயமற்றது என சென்னை பெட்ரோலிய கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாறிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

The post சென்னை பெட்ரோலிய கழகம் 73 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டியதில்லை: தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Petroleum Corporation ,National Green Tribunal ,Southern Region ,Chennai ,Buckingham Canal ,Chennai Petroleum Corporation Company ,Manali ,Southern ,Region ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...