×

அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறை

திருவாரூர்: திருவாரூர் ஒன்றியம் புதுப்பத்தூர் கிராமத்தில் வசிப்பவர் நடராஜன் (57). திருவாரூர் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியகுழு கவுன்சிலராக 5 ஆண்டும், 3 முறை ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ல் புதுப்பத்தூர் ஊர்குளத்தை எடுத்து நடத்தும் விவகாரத்தில் அதே ஊரைசேர்ந்த மீன் வியாபாரி வீரையனை (57) நடராஜன், அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கை திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜ் விசாரித்து, நடராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruvarur ,Natarajan ,Puduppattur ,Tiruvarur South Union AIADMK ,Tiruvarur Panchayat Union Committee ,Panchayat Council ,Puduppattur… ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள தனது இல்லத்தில்...