×

கோயில் விழாவில் குறிப்பிட்ட சபாவுக்கு மட்டும் முன்னுரிமை தர அறநிலையத்துறைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை : கோயில் விழாவில் குறிப்பிட்ட சபாவுக்கு மட்டும் முன்னுரிமை தர அறநிலையத்துறைக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. போரூர் பங்குனி உத்திர பால்காவடிவேல் பூஜா சபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயிலில் வழிபாடு நடத்த குறிப்பிட்ட சபாவிற்கு மட்டும் தனி உரிமை கிடையாது. அனைவரும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது; தேர் திருவிழாவில் சபா சார்பாகவும் கலந்து கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்ததுடன், திருவிழாவில் பங்கேற்க அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

The post கோயில் விழாவில் குறிப்பிட்ட சபாவுக்கு மட்டும் முன்னுரிமை தர அறநிலையத்துறைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Charities ,Chennai ,Madras High Court ,Porur Panguni Utthira ,Palgavadivel ,Pooja Sabha ,High Court ,Dinakaran ,
× RELATED நிபுணர் குழுவின் ஒப்புதலை பெற்ற பிறகே...