×

9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர்: நாசா அறிவிப்பு

கேப் கெனாவரெல்: 9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது. சூழ்நிலை காரணமாக விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக தரையிறங்கினார். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது. டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிராகன் விண்கலம் மூலம் 17 மணி நேரம் பயணித்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர். விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விண்கலத்தில் இருந்து வெளியே வந்த 4 பேரும் ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஹூஸ்டன் விண்வெளி மையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர் என நாசா அறிவித்துள்ளது.

இருவரின் உடலும் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளன. விண்வெளி மையத்தில் இருந்தபோது உடல் எடையற்றதைப் போன்று இருந்திருக்கும். தசை உள்ளிட்ட உறுப்புகள் புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப சீராக செயல்பட நேரம் பிடிக்கும் நாசா தெரிவித்துள்ளது.

The post 9 மாதங்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மிக ஆரோக்கியமாக உள்ளனர்: நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,Earth ,NASA ,Cape Canaverell ,Wilmore ,Florida Sea of the United States ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம்...