தஞ்சாவூர், மார்ச் 19: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் பகுதியில் திற ந்த நிலையில் இருக்கும் மழைநீர் வடிகாலினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தஞ்சை நாஞ்சிக்கோ ட்டை சாலை அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி முழுமையாக நடைபெறாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையோரத்தில் திறந்த நிலையில் வடிகால் இருக்கிறது.
பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வடிகாலில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டியபடி இருக்கின்றன. சாலையோரத்தில் பெரிய பள்ளம் போல வடிகால் காட்சி அளித்து வருகிறது. வடிகாலுக்குள் மழைநீர் தேங்கி நாளடைவில் கழிவுநீராக மாறி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிக்கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் வடிகாலுக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.இதன் காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திறந்த நிலையில் இருக்கும் வடிகாலால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி யை நிறைவு செய்ய வேண்டும். வடிகாலை சிமிண்டு மூடி மூலம் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை அண்ண நகரில் திறந்தநிலை மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.