- சங்காதர சதுர்த்தி
- வல்லபவிநாயகர் கோயில்
- பெரம்பலூர்
- வல்லப விநாயகர்
- சங்காதர சதுர்த்தி விழா
- ஸ்ரீ மஹா மாரியம்மன்
- ஸ்ரீ வல்லபவிநாயகர்
- எடத்தெரு
- பெரம்பலூர் நகராட்சி
பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூரில் வல்லப விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பெரம்பலூர் நகராட்சியில் எடத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சங்கடஹரசதுர்த்தி விழாவை முன்னிட்டு இரவு 7.30 மணி அளவில் ஸ்ரீமகா மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்படி, பால், தயிர், சந்தனம், இளநீர், வாசனை திரவியங்கள் மற்றும் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா உபயதாரரான காரியக்காரர் பழனியப்பன், முன்னாள் அரங்காவலர் வைத்தீஸ்வரன், எடத்தெரு, வ.உ.சி.தெரு, பெரிய தெற் குத்தெரு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பூஜைகளை குமார், மற்றும் ராமர் பூசாரிகள் செய்து வைத்தனர்.
The post பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி appeared first on Dinakaran.