×

மயிலாடுதுறையில் கலெக்டர் திடீர் ஆய்வு

 

மயிலாடுதுறை, மார்ச் 19: மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கு, கூறைநாடு பகுதியில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, புனித சின்னப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை நேரில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதனையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறை கிடங்கில் உள்ள உணவு பொருட்கள் இருப்பு மற்றும் அவற்றின் எடை மற்றும் தரம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, கூறைநாடு பகுதியில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்டு, மருந்தகம் மற்றும் மருந்து இருப்பு விவரங்கள் குறித்தும், மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை பதிவேடு மற்றும் புறநோயாளிகளின் வருகை பதிவேடு குறித்தும், விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

The post மயிலாடுதுறையில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,St. Chinnapar Girls' Higher Secondary School ,Siddhargad Tamil Nadu Consumer Goods Corporation Circle Processing Warehouse ,Urban Government Primary Health Center ,Kottainadu ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்