×

நள்ளிரவில் அம்மன் கோயிலை இடித்த மர்ம நபர்களுக்கு வலை

நரசிங்கபுரம், மார்ச் 19: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியக்கரையில், தம்மம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இது 30க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குலதெய்வ கோயிலாக உள்ளதால், அவர்கள் செவ்வாய், வெள்ளி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர், பெரியாண்டிச்சி அம்மன் கோயிலை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். நேற்று காலை கோயில் இடிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

The post நள்ளிரவில் அம்மன் கோயிலை இடித்த மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Amman temple ,Narasinghapuram ,Periyandichi ,Amman ,temple ,Malliyakkarai ,Athur ,Salem district ,Dhammampatti ,Amavasya… ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1500 கனஅடி