×

13வது பட்டமளிப்பு விழா

கோவை, மார்ச் 19: கோவை நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரய்யா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான டாக்டர். பி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். நேரு இண்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் டாக்டர் சைதன்யா கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மிஷன் இயக்குனர் மற்றும் அட்டல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் முன்னாள் கூடுதல் செயலாளர் நிதி ஆயோக், டாக்டர் ரமணன் ராமநாதன் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், வேளாண் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் உணவு தொழில்நுட்பம், வணிக நிர்வாகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் மொத்தம் 137 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். இதில், நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.சிவராஜா, நேரு கல்வி குழுமத்தின் கல்வியாளர் மற்றும் நிர்வாகம் டாக்டர் எச்.என் நாகராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 13வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : 13th Convocation Ceremony ,Coimbatore ,Nehru College ,of Technology ,Sir M Visvesvaraya Hall ,Dr. ,P Krishnakumar ,CEO ,Nehru Educational Groups… ,13th ,Dinakaran ,
× RELATED அவிநாசி நகருக்குள் வராமல்...