×

ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற ஊழல் வழக்கில் ரப்ரி தேவி, தேஜ் பிரதாப் ஈடி முன் ஆஜர்: லாலு பிரசாத்திடம் இன்று விசாரணை

பாட்னா: ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகனும் எம்எல்ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் நேற்று பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். இதனையொட்டி நூற்றுக்கணக்கான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன் திரண்டு இருந்தனர்.

லாலு பிரசாத் யாதவ் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் லாலு குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதில் ராப்ரி தேவி, அவர்களது மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

The post ரயில்வே பணிக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற ஊழல் வழக்கில் ரப்ரி தேவி, தேஜ் பிரதாப் ஈடி முன் ஆஜர்: லாலு பிரசாத்திடம் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rabri Devi ,Tej Pratap ,Lalu Prasad ,Patna ,The Enforcement Directorate ,Bihar ,Chief Minister ,Lalu Prasad Yadav ,Tej Pratap Yadav ,ED ,Dinakaran ,
× RELATED பீகார் சட்டப்பேரவை தேர்தல்; கார்கே,...