×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கோரிக்கை

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சட்டப்பேரவையில் நேற்று 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் செங்கல்பட்டு வரலட்சுமி மதுசூதனன் (திமுக) பேசியதாவது:

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்தவமனை ஒன்று அமைத்து தர வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன். மறைமலைநகர் ஊராட்சியில் பெண்கள் பயன்பெறும் வகையில் நவீன உடற்பயிற்சி அரங்குகளுடன் கூடிய மகளிர் பூங்கா அமைத்து தர வேண்டும். காட்டாங்குளத்தூர் ஊரப்பாக்கம் ஊராட்சியில் மழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளில் புகாமல் இருக்க மழைநீர் வடிகால் வாய்கால்களை தூர்வாரி தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து வசதியுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government Hospital ,DMK MLA ,Varalakshmi Madhusudhanan ,Chennai ,Legislative Assembly ,Chengalpattu Government Medical College Hospital ,Assembly ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...