×

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மார்ச் 19: விருதுநகரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பிஎம்எஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சமுத்திரம் தலைமையில் செயலாளர் கணேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர்களுக்கான இபிஎப் பென்சன் தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், இபிஎப் ஊதிய உச்சவரம்பை ரூ.30 ஆயிரமாக உயர்த்திட வேண்டும், இஎஸ்ஐ ஊதிய உச்சவரம்பை ரூ.42 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது, காப்பீடு நிதித்துறைகளில் அந்நிய முதலீட்டை முழுமையாக கைவிட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராஜபாண்டியன், ரத்னசபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Bharatiya Mastur ,Ganesan ,PMS Union District ,President Samudram ,Virudhunagar Collector's Office ,EPF Benson ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி