×

ரயில் நிலையத்தில் செல்போன் திருடியவர் கைது

விகேபுரம், மார்ச் 19:நெல்லை ரயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் அன்னராஜ் மகன் சக்திவேல். இவர் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்காக நெல்லைக்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது அவரது செல்போன் ரயில் நிலையத்தில் வைத்து திருட்டு போனது.

இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு ரயில் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இதில் செல்போன் திருட்டில் ஈடுபட்டது நெல்லை சிந்துபூந்துறை மேகலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் வெங்கட்ராமன் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை மீட்டனர்.

The post ரயில் நிலையத்தில் செல்போன் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Nellai railway station ,Sakthivel ,Annaraj ,Edappadi ,Salem district ,Nellai ,Karaiyaru Sorimuthu ,Ayyanar ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை