×

சுரண்டை அருகே துரைச்சாமிபுரம் யூனியன் பள்ளி ஆண்டுவிழா

சுரண்டை,மார்ச் 19: சுரண்டை அருகே துரைச்சாமிபுரத்தில் செயல்படும் யூனியன் நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். சுரண்டை அருகே துரைசாமிபுரத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மீனாட்சி தலைமையில் நடந்தது. .பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் கதிரேசன் வாசித்தார். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிகளை ஆசிரியை காந்திமதி தொகுத்து வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், கடையநல்லூர் யூனியன் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ் ஆகியோர், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினர். இதைத்தொடர்ந்து கல்வி வளர்ச்சிக்கு உதவிபுரிந்து கல்வி புரவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் பால்ராஜ், கோட்டைச்சாமி, மாரியப்பன், துரைச்சாமிபுரம் ஊர் மக்கள், மாணவர்களின் பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரகுமத்துலா, சித்திக்பாத்திமா, முத்துக்குமார் செய்திருந்தனர்.

The post சுரண்டை அருகே துரைச்சாமிபுரம் யூனியன் பள்ளி ஆண்டுவிழா appeared first on Dinakaran.

Tags : Duraishamipuram Union School ,Surandai ,Surandai Municipality ,Valli Murugan ,Kadayanallur ,Union ,Vice Chairman ,Aivendran Dinesh ,Union Middle School ,Duraishamipuram ,Surandai… ,
× RELATED பருவம் தவறி பெய்யும் கோடை மழையால்...