×

முதல்வர் பிறந்தநாளையொட்டி பெண்கள் கபடி போட்டி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ரா.சுரேஷ், 41வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் ஆகியோர் ஏற்பாட்டில் முதல் முறையாக பெண்கள் கபடி போட்டி நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 40 அணிகள் கலந்துகொண்டன. கபடி போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் முதல் இடம் பிடித்த, செயின்ட் ஜோசப் கல்லூரி அணிக்கு ரூ.72 ஆயிரம் பரிசுத்தொகையை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். 2வது இடம் பிடித்த ஈரோடு பி.கே.ஆர் கல்லூரி அணிக்கு ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் வழங்கினார். 3ம் இடம் பிடித்த தமிழக காவல் துறை அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் 4ம் இடம் பிடித்த கரூர் சேரன் கல்லூரி அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையை துணை மேயர் கோ.காமராஜ் வழங்கினார். கபடி போட்டியில் 4 பேர் சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, வாஷிங் மிஷன், ப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த வீராங்கனைக்கு 41வது வார்டு மாமன்ற உறுப்பினர் கற்பகம் சுரேஷ் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கினார். சிறந்த அணியினருக்கு புதிய காலணிகளை அண்ணாமலை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ராமச்சந்திரன், துணைச் செயலாளர்கள் லட்சுமிபதி ராஜா, கல்யாணி மணிவேல், மாமன்ற உறுப்பினர்கள் மாடம்பாக்கம் ஆ.நடராஜன், ராஜா, பகுதி பொருளாளர் அன்பழகன், தட்சணாமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சீனிவாசன், வெங்கடசாமி, வட்டச் செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் மணி, துணை அமைப்பாளர் நரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாளையொட்டி பெண்கள் கபடி போட்டி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Women's Kabaddi Competition ,Chief Minister ,Minister ,T.M.O. Anparasan ,Tambaram ,M.K. Stalin ,Kanchipuram North District ,Tambaram City ,Sembakkam ,South DMK ,Area Secretary ,Ra. Suresh ,41st Ward Councilor Karpagam… ,
× RELATED குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62...