- இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுந்தர்
- மதுராந்தகம்
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
- இந்தி எதிர்ப்பு திணிப்பு
- தென் யூனியன் திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
மதுராந்தகம்: இரு மொழிக்கொள்கையிலேயே நிறைய சாதித்துள்ளோம் என இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மேலகாண்டை கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மேலும், நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், சக்கரபாணி, வெங்கடேசன், சுமித்ரா தேவி, குமார், தனபால், ரோ சகாயராஜ், தெய்வசிகாமணி, டில்லி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வ பிரதாப் அனைவரும் வரவேற்றார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, கலந்து கொண்டு பேசுகையில், ‘மதுராந்தகம் அருகில் உள்ள செய்யூரில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கல்லூரியில் உங்களது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதேபோன்று செய்யூரில் தொழிற்பேட்டை அமையும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். படிப்பும் தொழிலையும் அமைக்க உள்ளார். உங்கள் பிள்ளைகளின் படிப்பையும் தொழிலையும் உறுதி செய்துள்ளார்.
இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கை வேண்டாம் இரு மொழிக் கொள்கையிலேயே பல்வேறு சாதனைகளை செய்து வருகிறோம் என பேசினார். இதனைத்தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவையும், கிளை செயலாளர்களுக்கு கைகடிகாரமும் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் இயந்திரமும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், தலைமைக் கழக பேச்சாளர் ஒப்பிலா மணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட அமைப்பாளர் யுவராஜ், துணை அமைப்பாளர் ஆண்டோ சிரில் ராஜ், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post இந்தி திணிப்பு எதிர்ப்பு கூட்டம் இரு மொழி கொள்கையிலேயே நிறைய சாதித்துள்ளோம்: எம்எல்ஏ சுந்தர் பேச்சு appeared first on Dinakaran.