×

சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய கூட்டம்: சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் தரிசனம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக, 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும், முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் இந்த கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

அதன்படி செவ்வாய்க்கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post சிறுவாபுரி கோயிலில் அலைமோதிய கூட்டம்: சுட்டெரிக்கும் வெயிலிலும் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Siruapuri Temple ,Beriyapaliam ,Siruapuri Murugan Temple ,Sami ,Balasubramaniya Swami Temple ,Siruapuri ,Periyapaliam ,Siruvapuri Temple ,
× RELATED சிறுவாபுரி முருகன் திருக்கோயில்