- சென்னை
- அமைச்சர்
- பி. கே. சேகரப்பு
- ஆயிரம் விளக்கு தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஈழன்
- திமுகா
- பெர்யார்
- ஈரோ
- ப. கே.
- செகர்பபா
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் நா.எழிலன் (திமுக) பேசுகையில், பெரியார் நாத்திகராக இருந்தாலும் ஈரோட்டில் உள்ள கோயில்களில் சிறப்பாக செயல்பட்டு கோயில்களில் வருவாய் ஈட்டி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். பெரியார் பாதையில் நடைபெறும் நம் திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு முதல்வர், அமைச்சர் மூலம் பல்வேறு கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவது காலத்தின் சிறப்பாகும். இந்த அடிப்படையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைந்துள்ள தர்மபுரம், முத்துமாரி அம்மன் கோயில் ஏழை மக்கள் வழிபடும் தலமாகும். அந்த கோயிலில் முன் சன்னதி கட்டுதல், மண்டபம் சீரமைத்தல் போன்ற பணிகளை அமைச்சர் மேற்கொள்வாரா, என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘உறுப்பினர் கோரிய தர்மபுரம் பகுதியில் இருக்கின்ற முத்துமாரியம்மன் கோயிலுக்கு அவரது கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களில் ஆய்வுக்கு செல்ல இருக்கின்றோம். இந்த கோயில்கள் மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு முதல்வரின் ஆலோசனையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை 20 மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 100 திருக்கோயில்கள் என்று திருப்பணிக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டு, கடந்த ஆண்டு சென்னையில் இருக்கின்ற 100 திருக்கோயில்கள் திருப்பணி எடுத்துக் கொள்ளப்பட்டு 70 திருக்கோயில்களின் குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது. அதேபோல் இந்த ஆண்டும் 100 திருக்கோயில்கள் மானிய கோரிக்கையில் எடுத்துக் கொள்வதற்கு முதல்வர் அனுமதி அளித்திருக்கின்றார். அந்த வகையில் இந்தாண்டு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்ற 100 திருக்கோயிலில் இந்த முத்துமாரியம்மன் கோயிலும் ஒன்றாக இருக்கும். நிச்சயம் ஓராண்டுக்குள் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்,’ என்றார்.
The post சென்னையில் 100 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்: பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.