×

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து பி.தர்மசெல்வன் விடுவிப்பு

தருமபுரி: தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து பி.தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பாளராக ஆ.மணி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாவது;

“தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பி.தர்மசெல்வன் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆ. மணி, பி.காம்., பி.எல்., எம்.பி., (பிரகி நிவாஸ், 84/ஏ-1, சேலம் மெயின் ரோடு, பாரதிபுரம், தருமபுரி 636 705) அவர்கள் தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

The post தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து பி.தர்மசெல்வன் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dhumapuri East District ,P. Dharmaselvan ,DARUMPURI ,Mani M. B. ,Secretary General ,Duraimurugan ,P. ,Darumpuri East District Corporation ,District Corporation ,Dharmaselvan ,Tharumpuri East District ,Chief Officer ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!!