×

வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு: இரண்டு ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி

வாளையாறு: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தமிழக – கேரள எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர தணிக்கைக்கு பிறகே வாகனங்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில, மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணிகளில் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் இருப்பதால், கேரளாவிலிருந்து கோவைக்கு வரக்கூடிய 14 பாதைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை ஊரடங்கு என்பதால் இன்றே மக்கள் அதிகமாக கோவைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி, வருவதற்கான காரணம் என்ன என்பதும், இரண்டு ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி என்றும் தெரிவித்துள்ளனர். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை 72 மணிநேரத்திற்குள் எடுத்துக்கொண்ட சான்றிதழ் இருந்தால் தான் தமிழகத்திற்குள் அனுமதி எனவும் தெரிவித்துள்ளனர். தேவையற்ற பயணமான சுற்றுலா தளங்களுக்கு வரக்கூடிய நபர்களுக்கு நாளை முழுஊரடங்கு என்பதை எடுத்துரைத்து மீண்டும் அவர்களை கேரளாவிற்கே அனுப்பிவைக்கின்றனர். கோவை மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3,000 கடந்த நிலையில், சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.                    …

The post வாளையாறு சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு: இரண்டு ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vallayar ,Tamil Nadu ,Vallaiyar ,Kerala, Tamil Nadu- ,Kerala ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...