×

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் : அமைச்சர் எ.வ.வேலு

சென்னை : விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “விதிமுறைகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறோம். மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற 2,3 கடிதங்களை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அனுப்பிவிட்டோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Union government ,Madurai Kappalur ,Minister ,E.V. Velu ,Chennai ,R.P. Udayakumar ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு