- அரியலூர்
- அரியலூர் மாவட்ட ஆட்சியர்
- தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு அபிவிருத்தி கழகம்
- Tadco
- அரியலூர் மாவட்டம்
- கலெக்டர்
- ரத்தின சாமி
அரியலூர் , மார்ச் 18: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஆங்கில தேர்வுக்கான பயிற்சி வழங்கவுள்ளதாக அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதனைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில், பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும். பி.எஸ்.சி மற்றும் எம்.எஸ்.சி நர்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்கவும்.
இப்பயிற்சி விடுதியில் தங்கி படிப்பதற்கான இரண்டு மாதம் செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும். எனவே, தகுதியான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளர்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு ஆங்கில தேர்வுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
