×

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சி

 

வேதாரண்யம், மார்ச் 18: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான திருகதவு அடைக்கத் திறக்கப்படுதல்,தேர் திருவிழா, தெப்பதிருவிழா ஆகியன நடைபெற்று முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாசிமக விழாவில் தஞ்சை ஆருத்ரா கலைக்கூடம் மாணவ மாணவிகளின் நாட்டிய சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு துவக்கி வைத்தார். கிருஷ்ணா பேங்க் ராஜேந்திரன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் நாகை மாவட்ட வர்த்தக சங்க முன்னாள் தலைவர் குணசேகரன், வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், ஆறுமுகம், வசந்தி செல்வகுமார், மல்லிகா தென்னரசு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vedaranyeswarar ,Temple ,Vedaranyam ,Masimaga festival ,Vedaranyeswarar Temple ,Thirugatavu ,Theppathiruvizha ,Masimaga… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி