- ஆசிரியர் கூட்டணி மண்டல கிளை கூட்டம்
- தேவூர், கீழ்வேளூர்
- கீழ்வேளூர்
- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை கூட்டம்
- தேவூர்
- நாகப்பட்டினம்
- மண்டல தலைவர்
- சாந்தி
- மாநில பொதுக்குழு
- சண்முகசுந்தரம்
- மாவட்ட நிர்வாகக் குழு
- சித்ரா
- தின மலர்
கீழ்வேளூர், மார்ச் 18: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்வேளூர் வட்டாரக்கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் அருள் முருகன் வரவேற்றார். மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண் ஆசிரியர்களுக்கான இசை நாற்காலி போட்டி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகளிர் மட்டும் பங்கெடுத்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் சுடரொளிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுது. மாநில தலைவரும், மாவட்ட செயலாளருமான லட்சுமி நாராயணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் கருணாநிதி, விருது பெற்ற ஆசிரியர்களான உஷாராணி, மகாலெட்சுமி, கோகிலா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். வட்டார பொருளாளர் ஐயப்பன், ஓய்வு பெற்ற முன்னாள் நகரச் செயலாளர் இளமாறன், விமலா, அந்தோணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
The post கீழ்வேளூர் தேவூரில் ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளை கூட்டம் appeared first on Dinakaran.
