×

ராமகிருஷ்ணன் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூரில் உள்ள டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் மெமோரியல் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா மற்றும் தொடக்க நிலை மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் பொருளாளர் கே.வி.ஜெகதாம்பிகா, நிர்வாக அலுவலர் எல்.எஸ்.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வி.ராமச்சந்திரன் வரவேற்றார்.

விழாவில் பள்ளியின் தாளாளர் ஏ.லாலு தலைமை தாங்கி மழலையர் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இதில் ரோட்டரி கிளப் தலைவரும், பள்ளி ஆலோசனை குழு உறுப்பினருமான எச்.ஜெயபிரகாஷ், முன்னாள் தலைவரும், பள்ளி ஆலோசனை குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.திராவிடமணி, டி.டொனால்ட் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

 

The post ராமகிருஷ்ணன் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Ramakrishnan CBSE School ,Tiruvallur ,Dr. S. Ramakrishnan Memorial CBSE School ,Old Tirupachur ,K.V. Jagadhambika ,L.S. Guna… ,Kindergarten graduation ceremony ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை...