- தொண்டி பஞ்சாயத்து பள்ளி
- தொண்டி
- தொண்டி மேற்கு முதன்மை பள்ளி
- தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளி
- தின மலர்
தொண்டி, மார்ச் 18: தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் மாணவர்களால் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. தொண்டி ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப் பள்ளியில் புத்தகத்திற்கு பூக்கள் பரிசு என்ற தலைமை ஆசிரியரின் அறிவிப்பின்படி மாணவர்கள் பள்ளியில் உருவாக்கிய நூலகத்திற்கு ஒவ்வொரு மாணவர்களும் தாங்கள் வாசிக்கும் புத்தகத்திற்கு பல்வேறு வகையான பூக்களை பரிசளித்தனர். வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், பூக்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அனைத்து வகையான பூக்களையும் பறித்து வந்திருந்தனர். பள்ளியில் உருவாக்கிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து தினமும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி ஆசிரியைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு வகையான பூக்களை பறித்து வந்திருந்தனர். இந்நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன். மேலாண்மை குழு தலைவி ரோசானியா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post தொண்டி ஊராட்சி பள்ளியில் புத்தக கண்காட்சி appeared first on Dinakaran.