- சங்கரன்கோவில்
- பாண்டியபுரம்
- வெள்ளாளங்குளம் பஞ்சாயத்து
- மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
- பஞ்சாயத்து யூனியன்
- தின மலர்
சங்கரன்கோவில், மார்ச் 18: மேலநீலிதநல்லூர் ஒன்றியம், வெள்ளாளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியும் உயர்நிலைபள்ளியும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. தொடக்கநிலைபள்ளி உயர்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் வரும் கல்வியாண்டில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.
இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என 30க்கும் மேற்பட்டோர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலதிட்ட உதவிகள் குறித்து பதாகைகள் ஏந்தியபடி பாண்டியாபுரம் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஊர்வலமாக சென்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் இளையபெருமாள் கூறியதாவது: பாண்டியாபுரம் பள்ளியானது அரை நூற்றாண்டைக்கடந்து இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு அறிவுறுத்தலின் அடிப்படையில் பேரணி நடத்தப்பட்டு அன்றைய தினமே முதலாம் வகுப்பில் 7 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்’ என்றார்.
The post அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.