×

அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

விகேபுரம், மார்ச் 18: விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கு மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பள்ளி தாளாளர் ராபர்ட் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பிரிட்ஜ் பள்ளியின் முன்னாள் மாணவிகள் ஆப்சனா, முதல்வர் ஐடா ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

பள்ளியின் இயக்குனர் ஜோசப் லியாண்டர் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பட்டம் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்டா பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

The post அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Kindergarten graduation ,Agasthiyarpatti ,Cambridge School ,Vikepuram ,UKG ,Agasthiyarpatti Cambridge Matriculation Higher Secondary School ,Robert ,Apsana ,Kindergarten graduation ceremony ,Agasthiyarpatti Cambridge School ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை