×

மாவட்டத்தில் பாஜவினர் மறியல்

தர்மபுரி, மார்ச் 18: சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, தர்மபுரி மாவட்டத்தில் 8 இடங்களில் பாஜ.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி 4 ரோட்டில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாஜ.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர தலைவர் ஆறுமுகம், கணேசன், ராஜசேகர், நிர்வாகிகள் தினேஷ், திருவேங்கடம், சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 25பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோல் பாலக்கோடு, பென்னாகரம், மொரப்பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 8 இடங்களில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் 160பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மாவட்டத்தில் பாஜவினர் மறியல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Dharmapuri ,Dharmapuri district ,president ,Annamalai ,Chennai ,Saravanan ,Dharmapuri 4th Road… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை