×

575 சார்பதிவாளர் அலுவலகங்களில் தைப்பூச நாளில் 1,610 ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை உயரதிகாரி தகவல்

சென்னை: பொதுமக்கள் கோரிக்கை காரணமாக தைப்பூச நாளில் செயல்பட்ட 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் 1,610 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ₹4.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று பதிவுத்துறை உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் முகூர்த்த நாட்கள் போல் தைப்பூசம், ஆடிப்பெருக்கு காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஜனவரி 18,  ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி,  சித்திரை முதல் தேதியான ஏப்ரல் 14ம் தேதி ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்கள் செயல்பாட்டில் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று பொதுமக்கள் சொத்து பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையில் தைப்பூச நாளில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பாட்டில் வைக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் வருவாயை அதிகரிக்கலாம். குறிப்பாக, சாதாரண நாட்களை விட முகூர்த்த நாட்களில் பொதுமக்கள் விரும்பும் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி கடந்த 18ம் தேதி மாநிலம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டன. அன்றைய தினம் மட்டும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சேர்த்து 1,610 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆவணத்துக்கும் விடுமுறை தினத்திற்கான கூடுதல் கட்டணமாக ₹200 வசூலிக்கப்பட்டன.  அன்றைய தினத்தில் மட்டும் அரசுக்கு ₹4.39 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் தைப்பூச நாளில் 1,610 ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை உயரதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Thaipoosa day ,Registration Department ,Chennai ,Thaipusa day ,Thaipusa ,day ,Dinakaran ,
× RELATED பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு...