×

இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி கடன் ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி கடன் வழங்க உள்ள ஒன்றிய அரசு ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:  இலங்கை அரசு திவால் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இலங்கை அரசு, இந்தியாவிடம் கடனுதவியை கோரியதை தொடர்ந்து 18,090 கோடி மதிப்பிலான கடன் வசதித் திட்டத்தை இலங்கைக்கு இந்தியா அறிவித்திருக்கிறது. இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள இந்திய அரசு, அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படியான அரசியல் அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் வென்றெடுத்துத் தர வேண்டும்….

The post இலங்கைக்கு 18 ஆயிரம் கோடி கடன் ஈழத்தமிழர் சிக்கலை தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Elam ,Ramadoss ,Union Government ,Chennai ,Elamazi ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...