- அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன்
- பர்மிங்காம்
- ஒய். கியு
- ஷி
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
- பர்மிங்காம், இங்கிலாந்து
- தின மலர்
பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் ஒய்.கியு.ஷி அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் ஒய்.கியு.ஷி, தைவான் வீரர்லீ சியோ ஹோ மோதினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய ஒய்.கியு. ஷி, 2வது செட்டை போராடி வசப்படுத்தினார். அதனால், 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஒய்.கியு.ஷி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சாம்பியனாகி கோப்பையை வென்ற சீன வீரர் ஒய்.கியு. ஷிக்கு, ரூ.87 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த லீக்கு ரூ.43 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.
The post ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர் appeared first on Dinakaran.