- அல்கராஸ்
- இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்
- டிராப்பர்
- ரூனி
- இந்தியன் வெல்ஸ்
- ஜாக் டிராப்பர்
- ஹோல்கர் ரூனி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்
- இந்தியன் வெல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா...
- தின மலர்
இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டிகளில் பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பர், டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியன்வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிப் போட்டி ஒன்றில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டனை சேர்ந்த உலகின் 14ம் நிலை வீரர் ஜேக் டிரேப்பருடன் மோதினார். யாரும் எதிர்பாராத வகையில் முதல் செட்டை டிரேப்பர் அற்புதமாக வென்றார்.
அதற்கு பதிலடி தரும் வகையில் 2வது செட்டை ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் அல்காரஸ் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது சுற்றை டிரேப்பர் வசப்படுத்தினார். இதனால், 6-1, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் டிரேப்பர் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் டேனியில் மெத்வதெவ், உலகின் 13ம் நிலை வீரர் ஹோல்கர் ரூனே உடன் மோதினார். முதல் செட்டை போராடி கைப்பற்றிய ரூனே, 2வது செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதனால், 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரூனே வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். டிரேப்பர் – ரூனே இடையிலான இறுதிப் போட்டி இன்று நடக்கிறது.
The post இண்டியன்வெல்ஸ் ஓபன் அடென்னிஸ்ரை இறுதியில் அடங்கிய அல்காரஸ்: இறுதியில் டிரேப்பர், ரூனே appeared first on Dinakaran.