×

12ம் வகுப்பு மாணவி மரணம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: பாஜ மாநில தலைவர் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:அரியலூர் வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற விவசாயியின் மகள் லாவண்யா. இவர் அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து உள்ளார். இந்த மாணவி தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துள்ளார்.  பள்ளி நிர்வாகம் சார்பாக, மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் மனம் உடைந்த லாவண்யா தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத் தன்மை கொண்ட திரவத்தை அருந்தியுள்ளார். மருத்துவமனையில் மாணவி மரணமடைந்துள்ளார். பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி மரணத்திற்கு முன் பேசிய வீடியோ பதிவு மனதை பதறவைக்கும். போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்திற்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதில் கட்டாய மத மாற்றம் செய்வதற்காக ஏற்பட்ட மன அழுத்தத்தை பற்றிய எந்த குறிப்பும் இல்லை. ஆகவே, அரசு நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மதமாற்றத்தடை சட்டம் அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவி, அரசு வேலை் அளிக்க வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும். …

The post 12ம் வகுப்பு மாணவி மரணம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: பாஜ மாநில தலைவர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Tamil ,Nadu ,president ,K. Annamalai ,Muruganandam ,Ariyalur Vadukappalayam ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...