- காங்கிரஸ்
- புது தில்லி
- பொதுச்செயலர்
- ஜெய்ராம் ரமேஷ்
- சிங்கப்பூர்
- டோனட்ஸ் மேல் தயாரிக்கப்பட்டது
- தின மலர்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,“சிங்கப்பூரை தளமாக கொண்ட சங்கிலி மேட் ஓவர் டோனட்ஸ் பேக்கரி பொருட்களுக்கு 18 சதவீத வரி செலுத்துவதற்கு பதிலாக தனது வணிகத்தை தவறாக வகைப்படுத்தி 5 சதவீத ஜிஎஸ்டி செலுத்தியதாக கூறி ரூ.100கோடி வரி விதிப்பை எதிர்கொண்டுள்ளது. பாப்கார்னுக்கு பிறகு இப்போது ஜிஎஸ்டியால் பாதிக்கப்படும் முறை டோனட்களுக்கு வந்துள்ளது. இந்த விவகாரம் இப்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்குவது அவசியமாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டியின் கீழ் பாப்கார்னுக்கு மூன்று வெவ்வேறு விதமான வரிகள் விதிக்கப்பட்டது, ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்த சிக்கல்களை இது வௌிப்படுத்தி இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post காங்கிரஸ் குற்றச்சாட்டு பாப்கார்னை தொடர்ந்து டோனட்டுக்கும் ஜிஎஸ்டி appeared first on Dinakaran.