×

ஐநா பொதுச்சபையில் ஜம்மு காஷ்மீர் பற்றி பேசி வம்பிழுக்கும் பாகிஸ்தான்: இந்தியா பதிலடி

ஐநா: ஐநா பொதுசபையில் ஜம்மு காஷ்மீர் பற்றி பேசி இந்தியாவை சீண்டிய பாகிஸ்தானுககு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. சர்வதேச இஸ்லாமிய வெறுப்பு எதிர்ப்பு தினம் நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் வௌியுறவு செயலாளர் தெஹ்மினா ஜான்ஜூவா, இந்தியாவுக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீர் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஜான்ஜூவாவின் கேள்விக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: உலகளாவிய மதபாகுபாடுகளை இந்தியா எதிர்க்கிறது. ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. பாகிஸ்தான் வழக்கம் போலவே ஜம்மு காஷ்மீர் பற்றி பேச தொடங்கி உள்ளது. காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வௌியுறவு செயலாளர் ஜான்ஜூவா நியாயமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் ஏற்கவே முடியாது.இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

The post ஐநா பொதுச்சபையில் ஜம்மு காஷ்மீர் பற்றி பேசி வம்பிழுக்கும் பாகிஸ்தான்: இந்தியா பதிலடி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Jammu ,Kashmir ,UN ,General ,Assembly ,India ,International Day Against Islamophobia ,Jammu and Kashmir ,UN General Assembly ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி